தடுப்பு மருந்துகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு,  உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும், மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்கி வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா சுட்டிக்காட்டியபடி, அனைத்து வகையான தடுப்பு மருந்துகளின் உலகளாவிய விநியோகத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புனேவை தளமாகக் கொண்ட “ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா” உலகிலேயே அதிக தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா ஆகியோரால் உருவாக்கப்படும் தடுப்பு மருந்தை தயாரிக்க இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த தடுப்பு மருந்தே தற்போது உலக விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்பில் உள்ள முன்னணி மருந்து ஆகும். இந்த தடுப்பு மருந்து தற்போது குறைந்தது இரண்டு நாடுகளில் மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் இதேபோன்ற ஆனால், நோயின் பிற்பகுதியில் அதன் செயல்திறனுக்கான சோதனைகளில் ஈடுபட உள்ளது.
தடுப்பு மருந்துகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பல இந்திய மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக், அதன் சொந்த தடுப்பு மருந்தை உருவாக்கி வருகிறது, பனசியா பயோடெக், சாந்தா பயோடெக், பயோலாஜிக்கல் இ லிமிடெட் ஆகியவை பெரிய உற்பத்தி திறன் கொண்ட வேறு சில பெரிய நிறுவனங்கள் ஆகும். எந்த தடுப்பு மருந்து முதலில் தயாராகிறது என்பதைப் பொருட்படுத்தாமல், உற்பத்தியில் பெரும்பகுதி இந்தியாவில் நிகழ வாய்ப்புள்ளது. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே வெளிநாட்டு சந்தைகளில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ளன. மிகப் பெரிய போட்டியாளர்களான சீன நிறுவனங்களின் மீது  அதிகரித்துவரும் அவநம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக அதுவும் இப்போதைய நெருக்கடியான  சூழலில் பல நாட்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களின் மீது கவனத்தை திருப்பியுள்ளன.  தவிர, உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான, இந்தியா தடுப்பு மருந்துகளின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் என்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

மாடர்னா தெரபியூட்டிக்ஸ் மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்குகிறது

உங்களில் பலர் ஏற்கனவே அறிந்திருக்கலாம். SARS-CoV2 என்று அழைக்கப்படும் தனித்துவ கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த  160 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் தற்போது உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தகவல்களின்படி, 25 தடுப்பு மருந்துகள் மனித சோதனைகளின் மூன்றாம் கட்டத்தில் உள்ளன.  இந்திய நிறுவனங்களான ஜைடஸ் மற்றும் பாரத் பயோடெக் உருவாக்கிய இரண்டுமே இதில் அடங்கும். இன்றைய நிலவரப்படி, மேலும் 139 மருந்துகள் முன் மருத்துவ மதிப்பீட்டில் உள்ளனர், அதாவது அவை இன்னும் விலங்குகள் மீது சோதிக்கப்பட்டு வருகின்றன.

இவைகளில் சில மருந்துகள் விஞ்ஞான உலகத்தை வியப்பில் ஆழ்த்தும் வகையில் சோதனை முடிவுகளைக் கொண்டுள்ளன எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மாடர்னா தெரபியூட்டிக்ஸ் உருவாக்கிய மருந்தின் முதற்கட்ட மனித  சோதனைகள் மார்ச் மாதம் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட சோதனைகளும் முடிவடைந்துள்ளன. கடந்த திங்களன்று, மூன்றாம் கட்ட சோதனைகள் தொடங்கியுள்ளன. இதற்காக 30,000 தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படாது. ஒப்பீட்டுக்காக தடுப்பு மருந்தைப் போன்ற போலியும் கொடுக்கப்படும். ஆனால் அது அவர்களுக்கு தெரிவிக்கப்படாது. பின்னர் அவர்களின் வழக்கமான வாழ்க்கை நடைமுறைகளைத் தொடர அனுமதிக்கப்படுவர். சில வாரங்களுக்குப் பிறகு, தடுப்பு மருந்து மற்றும் போலி மருந்து கொடுக்கப்பட்டவர்களின் உடலில் ஏற்பட்டுள்ள தடுப்பு மருந்துக்கெதிரான நோயெதிர்ப்பு செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பிடப்படும்.
தடுப்பு மருந்து வழங்கப்பட்டவர்களுக்கு கணிசமாக குறைந்த தொற்று வீதத்தைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது தடுப்பு மருந்தின் திறன் காரணமாக ஏற்படலாம்.  இந்த செயல்முறை ஏற்பட பொதுவாக பல மாதங்கள் ஆகும். மாடர்னாவின் மூன்றாம் கட்ட சோதனைகள்  தொழில்நுட்ப ரீதியாக, அக்டோபர் 2022 இல் நிறைவடையும். இருப்பினும், தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வணிக ரீதியாக தொடங்கப்படும் முதல் தடுப்பூசிகளில் ஒன்றாக மாறுமா என்பது சார்ந்த சோதனைகள் மற்றும் மருந்தின் பாதுகாப்பு தன்மை சோதனைத் தொடங்கி 29 ஆம் நாளில் தன்னார்வலர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் வெளிப்படும் நோயெதிர்ப்புத் திறனை சோதித்த பின்னர் முடிவு செய்யப்படும். மேலும், வைரஸை செயலிழக்கச் செய்யும் ஆன்டிபாடிகளின் அளவுகளை முதல் நாளில் இருந்து சுமார்  57 நாள் வரை அளவிடப்படும். விஞ்ஞானிகள் மிக முக்கியமாக சோதிக்கவுள்ள தரவுகளில் இது மிக மிக முக்கியமானது ஆகும்.

தடுப்பு மருந்தைக் கொண்டுவரும் மூன்றாவது இந்திய நிறுவனமாக ஜெனோவா உள்ளது

புனேவைச் சேர்ந்த ஜெனோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் தனது தடுப்பு மருந்தின் மனித சோதனைகளை அக்டோபர் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இப்போது அது முன் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இரண்டு இந்திய மருந்துகள் இந்த மாத தொடக்கத்தில் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளன. அவற்றில் ஒன்றை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக், புனேவைச் சேர்ந்த தேசிய வைராலஜி நிறுவனம் உடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வகங்களில் ஒன்று. மற்றொன்றை அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஜைடஸ் காடிலா உருவாக்கியுள்ளது.

மற்ற இரண்டைப் போலல்லாமல், ஜெனோவா ஒரு புதிய முயற்சியாக, mRNA தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இது வைரஸுக்கு எதிராக மனிதர்களில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் பல வழிகளில் ஒன்றாகும். வைரஸின் ஒரு முக்கியமான பகுதியை மீண்டும் உருவாக்க செல்களுக்கு சிக்னலை அனுப்பும் ஒரு தூதர் போன்றதொரு செயல்ப்பாட்டை இந்த mRNA வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற இரண்டு இந்திய அடுப்பு மருந்துகளும் வெவ்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. பாரத் பயோடெக் தடுப்பு மருந்து நோயெதிர்ப்பு செயல்பாடுகளைத் தூண்ட செயலிழக்கச் செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட வைரஸ்களை பயன்படுத்துகிறது. அதே சமயம் சைடஸ் காடிலா  மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட டி.என்.ஏ மூலக்கூறைப் பயன்படுத்தி வைரஸின் செயல்பாடுகளை பிரதிபலிக்க செய்யும் அணுகுமுறையில் தனது தடுப்பு மருந்தை வடிவமைத்துள்ளது. ஒரு நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கு வேறு வழிகள் உள்ளன.
Thank you: Indian Express