இந்தியாவில் மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை – செயலிகள் பட்டியல்

டெல்லி: இந்தியாவில் ஏராளமான சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்து உள்ளது.

கடந்த ஜூன் மாதம் காஷ்மீர் மாநிலம்  லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்திற்கிடையே  ஏற்பட்ட மோதலின்போது  20 இந்திய வீரர்கள்  வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம் உலக  அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, தேச நலன் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன நாட்டின் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக  பப்ஜி உள்ளிட்ட  118 செயலிகளுக்கு தடை விதித்தது.

இந்த நிலையில், தற்போது மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதில் அலிபாபா, வெடிவி, மாம்போ டிவி  ஆப்களும் அடங்கும்.