இந்தியா வாங்கும் ஆளில்லா விமானம்: பாகிஸ்தான் அலறல்

டில்லி,

ந்தியா எல்லைபகுதிகளை  கண்காணிக்க டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே பல  உலக நாடுகள் ஆளில்லா விமானங்கள் பயங்கரவாதிகளை கண்டறிந்து அழித்து வருகிறது.  அமெரிக்கா அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க டிரோன்களையே பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவும் டிரோன்களை  பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் கண்காணிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய இந்தியா முயன்று வருகிறது. அமெரிக்க தயாரிப்பு டிரோன்கள் சக்தி வாய்ந்ததை என்றும், சுமார்  3500 பவுண்ட் எறையுடன் 50 ஆயிரம் அடி உயரத்தில் 18 மணி நேரம் பயணிக்க கூடிய திறன் உடையவை. அதே நேரத்தில் எதிரிகளின் மறைவிடத்தை கண்டறிந்து ரிமோட் மூலம் துல்லியமாக தாக்கும் வல்லமை படைத்தது என கூறப்படுகிறது.

இந்தியாவின் டிரோகன் முடிவு பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கவறப்படுகிறது.

English Summary
India buys drones: Pakistan shock