வீடு தேடி சென்று ஆர்எஸ்எஸ் புது பிரச்சாரம்!! தேர்தல் ஆதாயம் தேடும் யுக்தி

--

நாக்பூர்:

‘‘நமேத் குதும்ப் பிரபோதன்’’ என்ற குடும்ப கவுன்சிலிங் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது. மதிப்பு மற்றும் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு சைவ உணவு முறை மற்றும் இந்திய ஆடைகளை ஆர்எஸ்எஸ் இந்த பிரச்சாரத்தில் மூலம் வலியுறுத்தி வருகிறது. இந்த பிரச்சாரம் 2019ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும் என்ற கருத்து எழுந்துள்ளது.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் பரவலாக நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட கோபம், வெறுப்பை சமாளிக்க இந்த பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளதாக கருத்து எழுந்துள்ளது.

இந்த குழுவில் மூத்த ஸ்வயம்சேவகர்கள், ராஷ்டிரா சேவிகா சங்கம் (ஆர்எஸ்எஸ் பெண்கள் பிரிவு) பணியாளர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சைவ உணவில் உள்ள பயன்கள், குறிப்பாக பல தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துவதை ஒதுக்குதல் போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் தலைவரும், விதர்பா அமைப்பாளருமான அசோக் பகத் மற்றும் குழுவினர் இந்த பிரச்சார திட்டத்தில் நாக்பூரில் உள்ள சதார் பகுதியில் வசிக்கும் சுரேஷ் தேஷ்பாண்டே என்பவது குடும்பத்தினரை சந்தித்தார்.

அப்போது விழாக்கள், பண்டிகைகளின் போது புடவை, குர்தா, பைஜாமா அணிய வேண்டும். இந்திய கலாச்சாரத்திற்கு மாறாக பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மெழுகுதிரி ஏற்றி கேக் வெட்டக்கூடாது.
சாப்பாட்டிற்கு முன்பு இந்து நடைமுறைப்படி மந்திரங்கள் கூற வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.

அந்த சமயத்தில் டிவி பார்க்க கூடாது. குடும்பத்தினரோடு இருக்கும் போது அரசியல், கிரிக்கெட் குறித்து விவாதம் செய்யக் கூடாது. அனைவரும் பெண்களை மதிக்க வேண்டும். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கினர்.

இது குறித்த சுரேஷ் கூறுகையில்,‘‘அந்த குழுவினர் எங்க குடும்ப உணவு பழக்கம், பிடித்த டிவி சேனல் மற்றும் நிகழ்ச்சி, பிறந்த நாள் கொண்டாட்டம், விருப்ப ஆடைகள் குறித்து கேட்டறிந்தனர். குடும்ப உறுப்பினர்களிடையிலான பந்தத்தை வலுவாக்கும் வகையிலான இந்த திட்டம் நல்ல திட்டமாகும்’’ என்றார்.

‘‘இந்த விவாதங்ளின் போது குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் இதர குடும்ப உறுப்பின்களின் பிரச்னைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது’’ என்று சுரேஜ் மனைவி சுனிதா தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதாக அசோக் பகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
‘‘வாரத்தில் ஒரு நாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது நல்லியல்பு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலான உறவுகள் வலுவடையும்’’ என்றார்.

மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் அதுப் பிங்கில் கூறுகையில்,‘‘நாங்கள் முஸ்லிம், கிறிஸ்தவர் போன்ற சிறுபான்மையின குடும்பத்தினரையும் சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சார திட்டம் மக்கள் மத்தியில் மதநல்லிணக்கத்தை மீட்பதற்கும், நட்புறவு மற்றும சமுதாய ஒற்றுமை ஏற்படவும் வாய்ப்பாக அமைந்துள்ளது’’ என்றார்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில், ஒரு சுடுகாடு, ஒரு கிணறு என்ற பாஜ திட்டத்தை கொள்கையாக கொண்டுள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் அன்று தொடங்கப்பட்டுது. இதற்காக ஆர்எஸ்எஸ் தற்போது இந்த ‘‘குதும்ப் பிரபோதன்’’ என்ற பிரச்சார திட்டத்தை ஆர்எஸ்எஸ் செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தை தொழிலதிபர் ரத்தன் டாடா வரவேற்பு தெரிவித்துள்ளார். இவர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்தை கடந்த ஆண்டு நாக்பூரில் சந்தித்து பாராட்டினார். ‘‘ஸ்வயம் சேவாக்ஸ் என்ற இந்த திட்டத்தின் மூலம் குடும்பத்தினரை நேரடியாக இயக்கி, பிரிவினை மூலம் எதிர்வரும் தேர்தலில் ஆதாயம் தேட பாஜ நினைக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.