ஜோகன்னஸ்பர்க்: உலக கோப்பையில் சாம்பியன் ஆன பிறகு மைதானத்தில் வங்கதேசம் அணியினர் நடந்து கொண்டது அநாகரீகமானது என்று 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி கேப்டன் பிரியம் கர்க் கூறி இருக்கிறார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 17ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் ஆசிய அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்கதேசமும் இறுதிக்கு முன்னேறியது.

அல் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியனாகி சரித்திரம் படைத்தது. போட்டி முடிந்த பின்பு மைதானத்திற்குள் அவர்கள் ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டனர்.

அதனால் இந்திய, வங்கதேச வீரர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில் போட்டி முடிந்த பின்னர் இந்திய கேப்டன் பிரியம் கர்க் வங்கதேச வீரர்களை கண்டித்தார்.

அவர் கூறியதாவது: வெற்றி மற்றும் தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் பகுதி. ஆனால் மறுபக்கத்திலிருந்து எதிர்வினை மோசமாக இருந்தது. அது நடந்திருக்கக்கூடாது என்றார்.

இந்திய அணி பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரே கூறியதாவது: சில நேரங்களில் இவை நடக்கும். வீரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள், ஏனென்றால் நிறைய ஆபத்துக்கள் உள்ளன.

என்ன நடந்தாலும் அது நல்லதல்ல. கிரிக்கெட்டிற்கும் இது நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.