இந்தியா-சீனா எல்லை பதற்றம்: சீன பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த விவரங்களை சேகரிக்கிறது இந்தியா

டெல்லி :

ந்தியாவின் இறக்குமதியில் சுமார் 14 சதவீதம் சீனாவில் இருந்து வருகிறது, செல்போன்கள், தொலைத் தொடர்பு, மின்சாரம், பிளாஸ்டிக் பொம்மைகள் மற்றும் முக்கியமான மருந்து பொருட்கள் போன்ற துறைகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்றன.

சீனாவிலிருந்து மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான உள்நாட்டு விலை மற்றும் வரி பயன்கள் குறித்து தயாரிப்பு வாரியான விவரங்கள், குறிப்பாக சீனாவிலிருந்து வரும் தரம் குறைந்த பொருட்களைத் தடுப்பதற்கும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தொழில்துறையினரிடமிருந்து விவரங்களை கேட்டிருக்கிறது.

‘சுய சார்பு பாரத்தை’ ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிப்பதற்கான உயர் மட்டக் கூட்டம் சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தில் நடந்தது என்றும் அதில் சீன இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைப்பது உள்ளிட்ட விவாதங்கள் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கிடையேயான எல்லை பதட்டத்தை தொடர்ந்து, சீன பொருட்களைப் புறக்கணிப்பதற்கான கோரிக்கைகள் அதிகரித்து வரும் வேளையில், சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

கைக் கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், மருந்து பாட்டில்கள், கண்ணாடி கம்பிகள் மற்றும் குழாய்கள், ஹேர் கிரீம், ஹேர் ஷாம்பூக்கள், ஃபேஸ் பவுடர், கண் மற்றும் லிப் மேக் தயாரிப்புகள், அச்சிடும் மை, வண்ணப்பூச்சுகள் மற்றும் வார்னிஷ் மற்றும் சில புகையிலை பொருட்கள் ஆகிய தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து கருத்துகளையும் பரிந்துரைகளையும் கேட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த தயாரிப்புகள் குறித்து தங்கள் கருத்துக்களை அவர்கள் விரைவில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருப்பதாக, தொழில்துறையைச் சேர்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் சமீபத்தில் டயர்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவனங்களின் “சந்தர்ப்பவாத கையகப்படுத்துதல்களை” கட்டுப்படுத்த இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அதன் முன் ஒப்புதலை கட்டாயமாக்கியுள்ளது, COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை சீனாவிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டை கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.