மால்டோ: லடாக் பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

மால்டோ பகுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் ராணுவ கமாண்டர் லெப்டினட் ஜெனரல் ஹரீந்தர் சிங் பங்கேற்றார். சீனாவில் இருந்து மேஜர் ஜெனரல் லி லின் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இந்திய தரப்பில் மேலும், 6 அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை அமைதியான மூலம் கையாள வேண்டும், மோதல்களாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இன்றைய பேச்சுவார்த்தையின்போது, மொத்தம் 5 முக்கியப் பிரச்சினைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு நடத்தப்பட்டதாக தெரிகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள சீனப் பகுதிக்குட்பட்ட  மால்டா என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

முன்னதாக, இரு நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு இடையே, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முக்கிய பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது, கிழக்கு ஆசியாவுக்கான இந்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலர், நவீன் ஸ்ரீவத்சவா பங்கேற்றார். சீனா தரப்பில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சக தலைமை இயக்குனரான, வூ ஜியாங் ஹோ பங்கேற்றனர்.