ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் லடாக் லே பகுதி எல்லை பிரச்சனை தொடார்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கிழக்கு லடாக்கின் சுஷூல் பகுதியில் காலை 10:30 மணிக்கு இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆண்டு இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடைபெற்றது. சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட இந்த மோதலில்,இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நீடித்து வந்தது.  இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டதால் மேலும் பதட்டம் எழுந்தது.

இதைய்டுத்து,  போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே  சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை 10 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதனால் ஓரளவுக்கு எல்லையில் இருந்து  படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறது.

கிழக்கு லடாக்கின் சுஷில் பகுதியில் காலை 10.30 மணிக்கு இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.