ஃப்ளோரிடா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி டிஎல்எஸ் அடிப்படையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் ஷர்மா 67 ரன்களும், ஷிகர் தவான் 23 ரன்களும், விராத் கோலி 28 ரன்களும் அடித்தனர். க்ரூனல் பாண்டியா 20 ரன்களை அடித்தார்.

முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது இந்திய அணி. ‍மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஒஷானே தாமஸ் மற்றும் காட்ரெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு டிஎல்எஸ் முறைப்படி 15.3 ஓவர்களில் 121 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் ‍தோற்று தொடரையும் இழந்தது. இந்தியா சார்பில் க்ரூனல் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.