தெற்காசிய விளையாட்டு – பதக்கப் பட்டியலில் இந்தியா விர்ர்ர்……..

--

காத்மண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்க வேட்டையில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுவரை இந்தியா 159 தங்கம், 91 வெள்ளி மற்றும் 44 வெண்கலம் என மொத்தம் 294 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஆண்கள் கபடி இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை மோதிய போட்டியில், இந்திய அணி தங்கம் வென்றது.
கூடைப்பந்துப் போட்டியிலும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றன. கத்திச் சண்டையிலும் இந்திய அணி இரு பிரிவுகளில் தங்கம் வென்றது.

கத்திச் சண்டையில் மட்டும் இந்திய அணி, 11 தங்கம், 5 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தமாக 17 பதக்கங்களை வென்றது. குத்துச்சண்டையில் 48 கிகி பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்தது.

இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் நாம் நினைப்பதுபோன்று பாகிஸ்தான் இல்லை. குட்டி நாடான நேபாளம்தான் உள்ளது. அந்நாடு இதுவரை 49 தங்கம், 54 வெள்ளி மற்றும் 92 வெண்கலம் என மொத்தம் 195 பதக்கங்களைப் பெற்றுள்ளது.