டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,226 ஆக உயர்ந்து 3584 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 6198 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,18,226 ஆகி உள்ளது.  நேற்று 150 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 3584 ஆகி உள்ளது.  நேற்று 3131 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 45,553 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,082 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2348 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 41,642 ஆகி உள்ளது  நேற்று 64 பேர் உயிர் இழந்து மொத்தம் 1454 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1408 பேர் குணமடைந்து மொத்தம் 11,726 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 776 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,967 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 95 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 400 பேர் குணமடைந்து மொத்தம் 6242  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 371 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,910 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 773 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 269 பேர் குணமடைந்து மொத்தம் 5488  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 571 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,659 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 194 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 375 பேர் குணமடைந்து மொத்தம் 5567 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 212 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,227 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 81 பேர் குணமடைந்து மொத்தம் 3485 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது டமன் டையு தாத்ரா நாகர் ஹவேலி யுனியன் பிரதேசங்கள்,, அருணாசல பிரதேசம், மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.