டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,387 ஆக உயர்ந்து 4711 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 7300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,65,386 ஆகி உள்ளது.  நேற்று 177 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 4711 ஆகி உள்ளது.  நேற்று 3171 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 70,920 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,745 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2298 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,516 ஆகி உள்ளது  நேற்று 85 பேர் உயிர் இழந்து மொத்தம் 1982 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 698 பேர் குணமடைந்து மொத்தம் 18,616 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 827 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,372 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 148 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 639 பேர் குணமடைந்து மொத்தம் 10548  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1024 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,281 ஆகி உள்ளது.  நேற்று 13 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 316 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 231 பேர் குணமடைந்து மொத்தம் 7496 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 367 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,572 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 960 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 454 பேர் குணமடைந்து மொத்தம் 8003  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 251 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,067 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 180 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 251 பேர் குணமடைந்து மொத்தம் 4815 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.