இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.74 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,76,146 ஆக உயர்ந்து 7750  பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 10,248பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,76,146 ஆகி உள்ளது.  நேற்று 277 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 7750 ஆகி உள்ளது.  நேற்று 6247 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,34,670 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,670 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 2258 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 90,787 ஆகி உள்ளது  நேற்று 120 பேர் உயிர் இழந்து மொத்தம் 3289 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1644 பேர் குணமடைந்து மொத்தம் 42,639 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,685 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 34,914 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 307 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 798 பேர் குணமடைந்து மொத்தம் 18,325 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்றைய முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை. நேற்று முன் தினம் பாதிப்பு எண்ணிக்கை 29,943 ஆகவும்  874 பேர் மரணம் அடைந்துள்ளளதாகவும் மொத்தம் 11,357 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் இருந்தது.

குஜராத் மாநிலத்தில் நேற்று 470 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,044 ஆகி உள்ளது  இதில் நேற்று 33 பேர் உயிர் இழந்து மொத்தம் 1313 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 409 பேர் குணமடைந்து மொத்தம் 14,373 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 388 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,336 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 301 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 328 பேர் குணமடைந்து மொத்தம் 6669 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.