இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.52 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,52,020 ஆக உயர்ந்து 43,453 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 65,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 21,52,020 ஆகி உள்ளது.  நேற்று 875 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 43,453 ஆகி உள்ளது.  நேற்று 52,135 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 14,79,804 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,28,301 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 12,822 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,03,084 ஆகி உள்ளது  நேற்று 275 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,367 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,081 பேர் குணமடைந்து மொத்தம் 3,38,362  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,882 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆகி உள்ளது  இதில் நேற்று 118 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,808 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,043 பேர் குணமடைந்து மொத்தம் 2,32,618 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 10,080 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,17,040 ஆகி உள்ளது  இதில் நேற்று 97 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,939 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,151 பேர் குணமடைந்து மொத்தம் 1,29,615 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,178 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,72,102 ஆகி உள்ளது  இதில் நேற்று 93 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 3,091 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,006 பேர் குணமடைந்து மொத்தம் 89,238 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,44,127 ஆகி உள்ளது  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,098 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1130 பேர் குணமடைந்து மொத்தம் 1,29,362 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி