டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,351 ஆக உயர்ந்து 1889 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 3344 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்த எண்ணிக்கை 56,351 ஆக உள்ளது.  நேற்று 104  பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1889 ஆகி உள்ளது.  நேற்று 1478 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,776 ஆகி உள்ளது.  தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37,682 பேர் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 1216 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,974 ஆகி உள்ளது  நேற்று 43 பேர் உயிர் இழந்து மொத்தம் 694 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 207 பேர் குணமடைந்து மொத்தம் 3301 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 388 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,013 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 425 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 209 பேர் குணமடைந்து மொத்தம் 1709 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 448 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,980 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து மொத்தம் 66 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 389 பேர் குணமடைந்து மொத்தம் 1931 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 580 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,409 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 37 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1547 பேர் குணமடைந்து மொத்தம் 1547 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 110 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,427 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 99 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 160 பேர் குணமடைந்து மொத்தம் 1889 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.