டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,292 ஆக உயர்ந்து 2415 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 3523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 74,292 ஆகி உள்ளது.  நேற்று 120 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2415 ஆகி உள்ளது.  நேற்று 1871 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,420 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,453 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 1026 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,427 ஆகி உள்ளது  நேற்று 53 பேர் உயிர் இழந்து மொத்தம் 921 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 339 பேர் குணமடைந்து மொத்தம் 5125  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 362 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,904 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 537 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 466 பேர் குணமடைந்து மொத்தம் 3246 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 716 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,718 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 61 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 83  பேர் குணமடைந்து மொத்தம் 2134  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 406  பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,639 ஆகி உள்ளது.  நேற்று 13 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 86 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 383 பேர் குணமடைந்து மொத்தம் 2512 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 138 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,126 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 117 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 130 பேர் குணமடைந்து மொத்தம் 2454 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.