டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,055 ஆக உயர்ந்து 2551 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 3725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 78,055 ஆகி உள்ளது.  நேற்று 136 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2551 ஆகி உள்ளது.  நேற்று 1946 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 26,400 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,099 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 1495 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,922 ஆகி உள்ளது  நேற்று 54 பேர் உயிர் இழந்து மொத்தம் 975 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 422 பேர் குணமடைந்து மொத்தம் 5547  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 364 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,268 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 566 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 316 பேர் குணமடைந்து மொத்தம் 3562 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 509 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,227 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 64 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 42 பேர் குணமடைந்து மொத்தம் 2176  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 359  பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,998 ஆகி உள்ளது.  நேற்று 20 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 106 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 346 பேர் குணமடைந்து மொத்தம் 2858 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 202 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,328 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 121 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 119 பேர் குணமடைந்து மொத்தம் 2573 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது டமன் டையு தாத்ரா நாகர் ஹவேலி யுனியன் பிரதேசங்கள்,, அருணாசல பிரதேசம், மிசோரம், மணிப்பூர் கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.