டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,784 ஆக உயர்ந்து 2753 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 85,784 ஆகி உள்ளது.  நேற்று 104 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2753 ஆகி உள்ளது.  நேற்று 2377 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 30,258 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,768 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 1576 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,100 ஆகி உள்ளது  நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 1068 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 505 பேர் குணமடைந்து மொத்தம் 6564 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 434 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,108 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 71 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 359 பேர் குணமடைந்து மொத்தம் 2599  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 340 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,932 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 606 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 473 பேர் குணமடைந்து மொத்தம் 4035 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 425 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,895 ஆகி உள்ளது.  நேற்று 8 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 123 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 473 பேர் குணமடைந்து மொத்தம் 3518 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 213 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,747 ஆகி உள்ளது  இதில் நேற்று யாரும் உயிர் இழக்கவில்லை. இதுவரை மொத்தம் 125 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 91 பேர் குணமடைந்து மொத்தம் 2729 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது டமன் டையு தாத்ரா நாகர் ஹவேலி யுனியன் பிரதேசங்கள்,, அருணாசல பிரதேசம், மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.