டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,648 ஆக உயர்ந்து 2871 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 4792 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 90,648 ஆகி உள்ளது.  நேற்று 118 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2871 ஆகி உள்ளது.  நேற்று 3979 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,224 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,548 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 1606 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,706 ஆகி உள்ளது  நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 1135 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 524 பேர் குணமடைந்து மொத்தம் 7088 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 1057 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,989 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 625 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 273 பேர் குணமடைந்து மொத்தம் 4308 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 477 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,585 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 74 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 939 பேர் குணமடைந்து மொத்தம் 3538  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 408 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,333 ஆகி உள்ளது.  நேற்று 6 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 129 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 473 பேர் குணமடைந்து மொத்தம் 3518 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 213 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,960 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 126 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 215 பேர் குணமடைந்து மொத்தம் 2944 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.