டெல்லி:

ந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 28-ஆம் தேதி பிற்பகல் 2 மணி நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை விபரங்கள் வெளியாகியுள்லது.

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் 43 பேர் என்றும், சென்னையில் 18 பேரும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 6 பேரும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் பாதிகப்பட்டுள்ளனர்.

சேலத்தில் 6 பேர், ஈரோட்டில் – 5 பேர், மதுரையில் – 3 பேர், கோவை, நெல்லை, திருச்சி, அரியலூர், தாஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் என கொரோனா வைரசால பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று வெள்ளிக்கிழமை 149 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையில் ஒரே நாளில் இடம்பெற்ற மிகப்பெரிய அதிகரப்பு என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேற்கு மஹராஷ்டிரா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான 180 வைரஸ் தொற்றாளர்களும், தென் மாநிலமான கேரளாவில் 173 வைரசால் பாதிகப்பத்டுள்ளனர்.