இந்தியா – 5 லட்சத்த‍ை தாண்டிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது. இன்று(வெள்ளி) ஒரேநாளில் மட்டும் புதிதாக 17,000 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

இன்று ஒரேநாளில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 5000 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அம்மாநிலம்தான் கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி மராட்டியத்தில் 1,52,765 பேரும், ‍டெல்லியில் 77,240 பேரும், தமிழகத்தில் 74,622 பேரும், குஜராத்தில் 30,158 பேரும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில், கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 5,08,185. அதில், தற்போது சிகிச்சையில் உள்ளோர் 1,96,608 பேர். குணமடைந்தோர் 2,95,839 பேர் மற்றும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 15,682.

தற்போதைய நிலையில், உலகளவில், அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளையடுத்து, கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்திற்கு முன்னேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.