இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது….

புதுடெல்லி:
ந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில்கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 85 ஆயிரத்து 493 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 18 ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், 507 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 85 ஆயிரத்து 493 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 114 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 லட்சத்து 47 ஆயிரத்து 979 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு உயிரிந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 305 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இருபங்கு பாதிப்பு, மகாராஷ்டிரம், தமிழகம், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளது.