யு-19 ஆசியக் கோப்பை: 227 ரன்கள் வித்யாசத்தில் யு.ஏ.இ. அணியை வீழ்த்தி இந்தியாவின் இளம் வீரர்கள் அபார வெற்றி

--

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு எமீரகத்தை 227 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடர்ந்து 2வது வெற்றியை பதிவிட்டுள்ளது.

India

வங்கதேசத்தில் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. 8அணிகள் பங்கேற்றுள்ள இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா 2வது போட்டியில் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் உடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் ஆடிய அனுஜ் ரவாத் 102 ரன்களையும், தேவ்தத் 121 ரன்களையும் எடுத்து அசத்தினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்து அசத்தியது. இதையடுத்து 355 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற இலக்குடன் ஐக்கிய அரபு எமிரேஸ் வீரர்கள் களமிறங்கினர்.

அலி மிர்சா 41 ரன்களிலும், பிகி ஜான் 24 ரன்களிலும், கேப்டன் பஹாத் நிவாஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

போட்டியின் முடிவில் 227 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றிப்பெற்ற இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்தியா சார்பில் சித்தார்த் தேசாய் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.