மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அத்யாவசிய பொருள்களின் அளவை குறைக்க இந்தியா முடிவு

மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அத்யாவசிய பொருள்களின் அளவை இந்தியா குறைத்துள்ளது. மாலத்தீவில் உள்ள உணவு பற்றாக்குறை குறித்து சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து உருளைக்கிழங்கு, வெங்காயம், முட்டை உள்ளிட்ட அத்யாவசிய பொருள்களின் ஏற்றுமதியில் இந்தியா வரம்பை கொண்டு வந்துள்ளது. இத்தகைய செயலுக்கு ஏற்றுமதி பொருள்களில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இரு நாடுகளுக்கும் இடையில் சில அழுத்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மல்டெவ்
மாலத்தீவின் மாநில வர்த்தக நிறுவனத்தின் இயக்குமர் அஹமது ஷஹீர், இந்தியாவின் முடிவால் அத்யாவசிய பொருள்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மக்களிடம் தெரிவித்துள்ளார். 1981ம் ஆண்டு இரு நாட்களுக்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி மாலத்தீவிற்கு அத்யாவசிய பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. அத்யாவசிய பொருள்களின் தேவையை குறைத்துக் கொள்ளும்படி மாலத்தீவு வெளிநாட்டு வர்த்தக இயகுனரகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டது. 2018-2019ம் ஆண்டில் இருந்து புதிய வழிமுறைகளை வகுத்து வர்த்தக உறவு இருக்கும் என சில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உருளைக்கிழங்கின் ஏற்றுமதி 2018-2019ம் ஆண்டு 5,308 மெட்ரிக் டன் ஆக குறைந்துள்ளது. இது 2017-2018ம் ஆண்டு 5,589 மெட்ரிக் டன் ஆக இருந்தது. 2018-2019ம் ஆண்டிற்கான கோதுமை மாது ஏற்றுமதி 946 மெட்ரிக் டன் ஆக உயர்ந்துள்ளது. 2017-2018ம் ஆண்டு இது 408 மெட்ரிக் டன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட ஒரு செயல் இல்லை என்று இந்தியாவின் மத்திய சுங்கவரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவும், மாலத்தீவும் நீண்டக்கால உறவை வைத்திருப்பதால் சமீப காலங்களில் தேவைப்படும் அதியாவசிய பொருள்களின் உண்மை நிலையை கண்டறிய பகுப்பாய்வு நடத்தப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கான சராசரியை கணக்கிட்டு வர்த்தக வரம்பை ஏற்படுத்துவது மற்றப்பொருள்களின் அளவை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்யும் என ஆய்வு கூறுகிறது.