யு-19 ஆசியக் கோப்பை: 2 ரன்கள் வித்யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

யு-19 ஆசியக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை 2 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ind

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், வங்கதேசத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜெய்ஸ்வால் 37 ரன்களும், சமீர் சவுத்ரி 36 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணித் தரப்பில் ஷோர்பியுல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 46.2 ஓவர்களில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

வங்கதேச அணித் தரப்பில் சமீம் 59 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மோகித் மற்றும் சித்தார்த் தேசாய் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கார்ட்டூன் கேலரி