பார்வையற்றோர் உலக கிரிக்கெட்: பாகிஸ்தானை 7விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

துபாயில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

பார்வையற்றோருக்கான  உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக துபாயில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியாவும்பா கிஸ்தானும்,  மோதின. போட்டியின்போது டாஸ் வென்ற இந்திய அணியினர் பந்துவீச்சை தேர்வு செய்தனர். பாகிஸ்தான் அணியினிர் மட்டையுடன் களத்தில் இறங்கினர்.

40 ஓவர் நிர்ணயம் செய்யப்பட்ட இந்த போட்டடி விறுவிறுப்பாக நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் ஜமீலும், கேப்டன் நிசார் அலியும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தனர். 40 ஓவரில் 8 விக்கெட்டை இழந்த 282 ரன் எடுத்திருந்தது.

அதையடுத்து  இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் வீரர்  தீபக் மாலிக் 71 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும்   வெங்கடேஷ் அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 64 ரன்களும், அஜய் ரெட்டி 34 பந்துகளில் 47 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், இந்திய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கார்ட்டூன் கேலரி