இந்திய வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் கட்டாயம் தேவை!

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா வெல்ல வேண்டுமெனில், அலெக்ஸ் கேரி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

தற்போதைய நிலையில், ஆஸ்திரேலிய அணி 36 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்துள்ளது.

அலெக்ஸ் கேரி 37 பந்துகளில் 34 ரன்களையும், மேக்ஸ்வெல் 13 பந்துகளில் 19 ரன்களையும் எடுத்து ஆடிவருகின்றனர். இவர்கள் நிலைத்து நின்றுவிட்டால், அது இந்திய இன்னிங்ஸில் அமைந்த பாண்ட்யா & ஜடேஜா ஜோடிபோல் அமைந்துவிடும். பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு வெல்வது கடினமாக இருக்காது.

ஆனால், இந்த ஜோடியை ரன்குவிக்க விடாமல், இந்திய பவுலர்கள் வீழ்த்தும்பட்சத்தில், பின்வரிசையில் வரும் பவுலர்களுக்கு அதிக நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், இந்தியக் கேப்டன் கோலி, இதுவரை 5 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.