ஒருநாள் போட்டிகள் – 10 ஆண்டுகளாய் தொடரும் இந்திய ஆதிக்கம்..!

மும்பை: ஒருநாள் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருவது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தான் ஆடிய 249 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பெற்ற வெற்றிகள் 157. இது மற்ற அணிகளைவிட அதிகம். மேலும், இக்காலகட்டத்தில் இந்திய அணி வென்ற ஒருநாள் தொடர்களின் எண்ணிக்கை 35.

இந்திய அணிக்கு அடுத்து அதிக ஒருநாள் போட்டிகளில் வென்ற அணியாக ஆஸ்திரேலியா உள்ளது. 216 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி பெற்ற வெற்றிகள் 125.

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் வெறறி விகிதம் 1.987. ஆஸ்திரேலியாவின் வெற்றி விகிதம் 1.582.

இதே காலகட்டத்தில்தான் இந்திய அணி உலகக்கோப்பை மற்றும் சாம்பியன் டிராபி ஆகியவற்றை வென்றது. இந்திய அணி இக்காலகட்டத்தில் 35 ஒருநாள் தொடர்களை வென்றிருக்க, ஆஸ்திரேலியாவோ 32 ஒருநாள் தொடர்களைக் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்திற்கான எண்ணிக்கை 30.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு அடுத்து, 123 வெற்றிகளுடன் இங்கிலாந்தும், 114 வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்காவும் 113 வெற்றிகளுடன் இலங்கையும் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளன.