பிரான்ஸ் சர்வதேச குத்துச்சண்டை – இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்கள்!

பாரிஸ்: தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் ஆண்கள் சர்வதே குத்துச்சண்டை தொடரில், 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கலும், 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீத்தும், 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஆஷிஸ் குமாரும் தங்கத்தை தட்டிச் சென்றனர்.

மொத்தத்தில், இந்தியர்கள் தங்க மழையில் நனைந்தனர்.

51 கிலோ எடைப்பிரிவு இறுதியில், அமெரிக்காவின் ரெனே ஆப்ரகாமிடம் மோதிய அமித் பங்கல், 3-0 என்ற கணக்கில் போட்டியை வென்று தங்கம் கைப்பற்றினார்.

91 கிலோ எடைப்பிரிவு இறுதியில் பிரான்சின் சோஹேப்புடன் மோதிய சஞ்ஜீத், போட்டியை வென்று தங்கம் கைப்பற்றினார்.

பின்னர், 75 கிலோ எடைப்பிரிவு இறுதியில், அமெரிக்காவின் ஜோசப் ஜெரோமியுடன் மோதினார் இந்தியாவின் ஆஷிஸ் குமார். அப்போது, போட்டியின் இடையிலேயே காயத்தால் விலகிக்கொள்வதாக அமெரிக்க வீரர் அறிவித்ததால், ஆஷிஸ் குமாருக்கு தங்கம் கிடைத்தது.

57 கிலோ எடைப்பிரிவு இறுதியில் இந்தியாவின் கவிந்தர் சிங், பிரான்சின் சாமுவேல் கிஸ்டோஹர்ரியிடம் தோற்று, வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இத்தொடரில், இந்தியா மொத்தமாக 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் உள்ளிட்ட 7 பதக்கங்களை வென்றுள்ளது.