இந்திய பொருளாதாரம் 7.2% வளர்ச்சி

டெல்லி:
கடந்த அரையாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு மறுஆய்வு குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியா தனது இடத்தை தக்கவைத்துள்ளது. மேலும் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. ஏப்ரல்&அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம் சராசரியாக முறையே 5.2% மற்றும் 2.7% ஆக இருக்கிறது.

செலவினத்தை முறைப்படுத்துதல் மற்றும் வருவாயை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் மூலம் நிதி பற்றாக்குறையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார மந்த நிலை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறது. எனினும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. தவிர பண வீக்கமும் கட்டுக்குள் இருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கிறது. மேலும் முதல் ஆறு மாதங்களில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கிறது. இதனால் இந்தியா சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: india economy was grown 7.2 percentage in last half year, கடந்த அரையாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது
-=-