நியூயார்க்

நா பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லா நாடுகள் உறுப்பினர் தேர்தலில் இந்தியாவுக்கு 192 ல் 184 வாக்குகள் கிடைத்து வெற்றி அடைந்துள்ளது.

ஐநா சபையின் மிகுந்த வல்லமை பொருந்திய அமைப்பான பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர் நாடுகளாக அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.   இதில் உள்ள நிரந்தரமில்லா உறுப்பு நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது   இந்த நிரந்தரமில்லா உறுப்பு நாடுகளில் இருந்து உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்.

இதில் தேர்வு பெற்ற நாட்டின் உறுப்பினர் 2 ஆண்டுகள் பதவி வகிப்பார்.  அவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் 5 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்   இந்த ஆண்டு காலியான 5 இடங்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.  இந்தக்குழுவின் மொத்த உறுப்பினர்களான 192 பேரில் மூன்றில் இரு பங்கு வாக்குகளைப் பெற்றோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

அவ்வகையில் நேற்று நடந்த தேர்தலில் இந்தியாவுக்கு மொத்தம் உள்ள 192 உறுப்பினர்களில் 184 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.  இதனால் வரும் 2021 முதல் 2022 வரை இந்தியா பதவியில் இருக்கும்.  இந்த தேர்தலில் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் தேர்வு செய்யபட்டுளன. ஆசிய பசிபிக் பிரிவு நாடுகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஐநா பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லா உறுப்பினராக இந்தியா ஏற்கனவே 1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-85, 1991-1992 மற்றும் 2011-12 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.  ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியா நிரந்தரமில்லா உறுப்பினர் பதவியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.