சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகளை மைதானத்தில் சென்று பார்க்க ரசிகர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும்,  அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி,  4 டெஸ்ட் போட்டி, 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி,  முதல் மற்றும் இராண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள், பிப்ரவரி 5-ம் தேதி தொடங்க உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சேப்பாக்கம்  மைதானத்தில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால்,  ரசிகர்களுக்கு அனுமதி இல்லையென்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

“இந்திய கிரிக்கெட் வாரியம் 50 சதவீத பார்வையாளர்களுடன் டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.  தமிழக அரசும் அனுமதி  வழங்கியதாக கூறப்பட்டது. ஆனால்,  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வேண்டுகோளை ஏற்று, தற்போது யாருக்கும் அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட், 3 ஒருநாள், ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-ந்தேதி சென்னையில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டியும் சென்னையிலேயே நடக்கிறது.
இந்த இரண்டு போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.