சந்திரயானுக்கு அடுத்து கடலடி தாதுக்கள் ஆய்வில் இறங்கிய இந்தியா!

சென்னை: நிலவின் தென்பகுதியை ஆராய்வதற்கு சந்திரயான் – 2 ஏவப்பட்ட பின்னர், தற்போது கடலுக்கடியில் உள்ள தாதுக்களை ஆராயும் பணியிலும் இந்தியா ஈடுபடவுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் சுமார் 6000 மீட்டர் ஆழத்தில் உள்ள தாதுக்கள் குறித்த ஆய்வை இந்தியா துவங்கவுள்ளது. இத்தகைய ஆராய்ச்சியில் இந்தியா ஈடுபடுவது இதுதான் முதல்முறை.

குறிப்பிட்ட பகுதியில் நிறைந்திருப்பதாய் கூறப்படும் கோபால்ட், நிக்கல் மற்றும் செம்பு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தியாவின் கரையிலிருந்து சுமார் 6000 கி.மீ. தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பணியில் 12 டன் எடையுள்ள வாகனம், சென்சார் மற்றும் இதர தொழில்நுட்ப உபகரணங்களுடன் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சோதனை முயற்சிகள் வெற்றிபெற்றால், சீனா மற்றும் கொரியாவுக்கு அடுத்து, கடலடி கனிமத்திற்கான சுரங்கப் பணிகளில் ஈடுபடும் மூன்றாவது நாடாக இந்தியா மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed