சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை: மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு

டெல்லி: சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. சர்வதேச பயணிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. இது குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

சர்வதேச விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும், சரக்கு சேவைகளுக்கான விமானங்களுக்கும், விமான போக்குவரத்து இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.