மாட்ரிட்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஃபைனல்ஸ் தொடரில் கலந்துகொள்வதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், குரேஷியாவுடன் மோதுகிறது இந்திய அணி.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஃபைனல்ஸ் இந்தாண்டின் இறுதியில்(நவம்பர் 23ம் தேதி) ஸ்பெயின் நாட்டில் தொடங்கி நடக்கிறது. எனவே, அதில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்றுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக சுமித் நாகல் இடம்பெற்றுள்ளார். இவர் உலக தரநிலையில் 127வது இடம் வகிக்கிறார். மேலும், தர நிலையில் 132வது இடம்பெற்றுள்ள குன்னேஸ்வரனும் பங்கேற்கிறார்.

இரட்டையர் பிரிவைப் பொறுத்தவரை, இந்த 2020ம் ஆண்டுடன் தனது ஓய்வை அறிவித்துள்ள லியாண்டர் பயஸ், போபண்ணாவுடன் இணைந்து களமிறங்குகிறார்.

குரேஷியா அணிக்கு தலைமை ஏற்றிருப்பவர், தரவரிசையில் 37வது இடத்திலுள்ள மரின் சிலிக். இவர் 2014ம் ஆண்டின் யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.