பெண்கள் டி20 உலகக்கோப்பை – அரையிறுதியில் மோதும் அணிகள் விபரம்!

மெல்போர்ன்: பெண்கள் உலகக்கோப்பை டி-20 தொடரின் அரையிறுதியில் மோதவுள்ள அணிகள் இறுதியாகியுள்ளன.

இந்தியா இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்கின்றன.

இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்தியா 8 புள்ளிகளையும், ஆஸ்திரேலியா 6 புள்ளிகளையும் பெற்றன. ‘பி’ பிரிவில் இடம்பெற்ற இங்கிலாந்து 6 புள்ளிகளையும், தென்னாப்பிரிக்கா 7 புள்ளிகளையும் பெற்றன.

இதனடிப்படையில், ‘ஏ’ பிரிவு இந்திய அணி, ‘பி’ பிரிவு இங்கிலாந்தையும், ‘ஏ’ பிரிவு ஆஸ்திரேலிய அணி ‘பி’ பிரிவு தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்கின்றன.

கடந்தாண்டு நடைபெற்ற பெண்கள் டி-20 உலகக்கோப்பையில், அரையிறுதியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. எனவே, இம்முறை இந்திய அணி எழுச்சிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.