கொடுமை: இதிலெல்லாம் இந்தியா முதலிடம்!

டில்லி

ஏற்கனவே, குழந்தை தொழிலாளர்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இந்தியாவில் அதிகம் உள்ளன என்பதைப் பார்த்தோம்.  குழந்தைத் திருமணத்திலும் இந்தியாதான் முதலிடம்.

சட்டப்படி குழந்தை திருமணம் செல்லாதாம் இந்தியாவில்

ஆனால் இன்னும் பால்ய விவாகங்கள் நடைபெறுவது முழுதும் நிற்கவில்லை.

இதனால் நாட்டுக்கு எத்தனை பெரிய இழப்பு தெரியுமா?

சிறு வயதில் மணம் செய்துக் கொள்ளும் பெண்கள் தன் குழந்தைமையிலிருந்து பெரிய பெண்ணாக மாறி, சிலர் தாய்மைக்கும் தள்ளப்படுகின்றனர்

இவர்களுக்கு உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி போன்றவை அவர்களின் வயதுக்கு ஏற்பவே இருப்பதால் பல பெண்கள் குழந்தைப் பிறப்பில் தாய் அல்லது சேய் இறந்து விடுகிறார்கள்

சில நேரங்களில் மரணம் இருவருக்குமே சம்பவிக்கிறது.

இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து, வளர்ச்சி ஆகியவை இல்லாததால் இளவயதிலேயே இறந்து விடுகின்றன.

இந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆனாலும்,  மற்ற குழந்தைகளை விட மந்தகதியிலேயே உள்ளனர்

கல்வி கற்கும் பெண்களுக்கு மணம் முடிப்பதன் மூலம் அவர்களின் கல்வி, முன்னேற்றம் ஆகியவை மிகவும் தடை பெறுகிறது.

அந்த பெண்ணின் குடும்பமும், கலாசார மற்றும் பொருளாதார வளர்ச்சியை முழு அளவில் அடைய முடிவதில்லை

பால்ய விவாகங்களை தவிர்த்து, பெண்கள் சரியான வயதில் தாய்மை அடைந்தால் நமது வளர்ச்சி பொருளாதார அளவில் ரூ..49600 கோடி வரை உயர வாய்ப்புள்ளது என ஒரு அறிக்கை கூறுகிறது

இது மட்டும் அல்ல,  நம் நாடு இன்னொன்றிலும் முதல் இடத்தில் உள்ளது

சமீபத்தில் டிரான்ச்பரன்சி இந்தியா நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் ஆசியாவிலேயே இந்தியா ஒரு விஷயத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

ஆம், ஊழலில் முதலிடம் இந்தியாவுக்கே

கணக்கெடுப்பில் இந்தியா முதலிடத்திலும்,  ஜப்பான் கடைசி இடத்திலும் உள்ளது.

இன்னும் எந்த எந்த கணக்கெடுப்பில் இந்தியா முதலிடம் பெறுமோ தெரியவில்லை.

பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு என பாடிய பாரதி நல்லவேளையாக உயிருடன் இல்லை.