பெங்களூரு:

விமானப் படைக்கு வலிமையை அதிகப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து சூ 30 எம்கேஎல் ரக போர் விமானங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


ராணுவ தளவாடங்களை வாங்குவதில் ரஷ்யாவுக்குத் தான் இந்தியா முன்னுரிமை கொடுத்து வந்தது.
தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை ரஷ்யா வழங்கும். அதனை இந்திய அரசின் நிறுவனமான ஹெச்ஏஎல் தான் வடிவமைக்கும்.

தற்போது இத்தகைய விமானங்களின் எண்ணிக்கை குறைந்து அபாய நிலைக்கு வந்துவிட்டது.
இந்த வகை விமானங்கள் நம்மிடம் 42 இருக்க வேண்டும். ஆனால் தற்போது 30 விமானங்கள் மட்டுமே உள்ளன. நமது விமானப் படையிடம் பழைய மிக் 21 ரக போர் விமானங்கள் மட்டுமே உள்ளன.

இது குறித்து ரஷ்ய கூட்டமைப்பின் ராணுவ தொழில்நுட்ப கார்ப்பரேஷன் துணை இயக்குனர் ஆன்டலாய் பஞ்குக் கூறும்போது, “சூ 30 ரக 18 விமானங்களுக்கான உதிரிபாகங்களை சப்ளை செய்யுமாறு, இந்திய அரசிடமிருந்து எங்களுக்கு வேண்டுகோள் வந்துள்ளது.

மேலும் மிக் ரக விமானங்களை கொள்முதல் செய்வதற்கு முந்தைய பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளது. மிக் ரக விமானம் மொத்தம் 21 தேவை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விமானங்களில் இந்தியாவின் விருப்பத்துக்கு ஏற்றவாறு அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இருக்கும். இந்த வகை விமானங்களை கையாண்ட அனுபவம் இந்திய பைலட்களுக்கு ஏற்கெனவே உள்ளது” என்றார்.

முதல்கட்டமாக,மிக் 29 ரக போர் விமானங்கள் 21 வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ரக விமானங்களை நாம் முதன்முதலில் 1980-ம் ஆண்டில் வாங்கினோம்.

தற்போது 21 விமானங்களின் விலை ரூ. 6 ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுதங்கள் தாங்கிய இந்த விமானம் ஒன்றின் விலை ரூ.285 கோடியாகும். அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் வகையில், இந்திய, ரஷ்ய அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தற்போது வலிமையான 3 ரஷ்ய விமானங்களை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.