டில்லி

ர்வதேச கிரிக்கெட் கமிட்டி வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிகள் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தில் உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கமிட்டி  டெஸ்ட் போட்டிகளில் தற்போதைய தரவரிசையை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்கா இரண்டாம்  இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில் 8, 9 மற்றும் 10 ஆம் இடங்களில் வங்கதேசம்,  மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் உள்ளன.

டெஸ்ட் போட்டிகள் தரவரிசை பட்டியலில் முதல் முறையாக மேற்கு இந்திய தீவுகள்  பின் தள்ளப்பட்டு 9 ஆம் இடத்தை பிடித்துள்ளது