சர்வதேச அளவிலான போட்டிகளில் இரண்டாவதாக பவுலிங் செய்து அதிக முறை வெற்றிப்பெற்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. சுமார் 50 போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி எதிரணியை பவுலிங் மூலம் மிரட்டி 22 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.

india

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நேற்று நாக்பூரில் நடந்து முடிந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டியில் தனது 500வது வெற்றியை பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

2017ம் ஆண்டு நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு பின்னர் நடந்த போட்டிகளில் 2வதாக பவுலிங் செய்து அதிக முறை வெற்றிப்பெற்ற அணி என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் இந்தியா பங்கேற்ற 50 போட்டிகளில் 22 போட்டிகளில் 2வதாக பவுலிங் செய்து எதிரணியை மிரட்டி அனைத்து விக்கெட்டுக்களையும் வீழ்த்தி வெற்றிப்பெற்ற அணிகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பெற்றது.

பவுலிங் மூலம் வெற்றிப்பெற்ற அணிகளின் பட்டியலில் 50 போட்டிகளில் 22 முறை வெற்றிப்பெற்ற இந்தியா முதலிடத்திலும், 25 போட்டிகளில் 14 முறை வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் 2வது இடத்திலும், 30 போட்டிகளில் 13 முறை வெற்றிப்பெற்ற நியூசிலாந்து 3வது இடத்திலும், 28 போட்டிகளில் 12 முறை வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி 4வது இடத்திலும், தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன.