காமன்வெல்த் 2018 : இந்தியாவுக்கு மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம்

கோல்ட் கோஸ்ட்

ஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் 2018 விளையாட்டுக்களில் இந்தியாவுக்கு பாயிண்டுகளின் அடிப்படையில் மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இன்று நிறைவு பெறும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா முதலில் இந்தியா மொத்தம் 65 பதக்கங்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.   தற்போது மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்ற இந்தியாவுக்கு மொத்தம் 66 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இந்த போட்டிகளில் ஆண்கள் பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக் மற்றும் சிராக் ஜோடி தோல்வியுற்ற போதிலும் அவர்களுக்கு புள்ளிகள் அடிப்படையில் வெள்ளிப் பதக்கம் வழங்கப் பட்டுள்ளது.   இந்த இரட்டையருக்கு இதுவே முதல் காமன்வெல்த் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.   மேலும் இந்தியா இந்தப் பிரிவில் முதலில் வெற்றி பெரும் பதக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதக்க தர வரிசையில் ஆஸ்திரேலியா 197 பதக்கங்கள் பெற்று முதலாவதாகவும், இங்கிலாந்து 136 பதக்கங்களுடன் இரண்டாவதாகும் இந்தியா 66 பதக்கங்களுடன் மூன்றாவதாகவும் உள்ளன.

இந்தியாவுக்கு இறுதியாக 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன

இந்தியாவுக்கு ஆண்கள் பிரிவில் 35 பதக்கங்களும்., பெண்கள் பிரிவில் 28 பதக்கங்களும்,  அணிகளாக விளையாடியதில் 3 பதக்கங்களும் கிடைத்துள்ளன.