புதுடெல்லி:

கடந்த 5 ஆண்டுகளாக ஜுன் மாதத்தில் இந்தியா வறண்ட பாலைவனம் போல் மாறிவருவதற்கு குறைவான மழை பொழிவே காரணம் என இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.


பருவ மழை தாமதமாக வருவதால், கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு ஜுன் மாதமும் இந்தியா வறண்ட பாலைவனம் போல் மாறி வருவதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதனால் பயிர்களுக்கும், பரந்த பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

நாடு முழுவதும் சராசரியை விட 3-ல் ஒரு பங்கு குறைவான மழை பொழிவே இருந்துள்ளது.
சர்க்கரை ஆலை கரும்புகளை உற்பத்தி செய்யும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் போதுமான மழை பெய்யவில்லை.
இந்தியாவில் 55% சாகுபடி நிலங்கள் மழையை நம்பியே உள்ளது.

விவசாய பொருளாதாரத்தில் ஆசியாவிலேயே இந்தியாவின் பங்கு 15% உள்ளது. ஏற்கெனவே இந்த சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது.

அடுத்த 3 வாரங்களுக்குள் மழை பெய்யாவிட்டால், இந்தியாவில் விவசாயத்துக்கு பெரும் பிரச்சினை ஏற்படும்.

கடந்த ஆண்டு ஒன்றரை கோடி ஹெக்டேரில் விவசாயிகள் பயிரிட்டனர். ஆனால், இந்த ஆண்டு 10% சதவீதம் குறைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.