டெல்லி: புதியதாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் எதிரொலியாக, இந்தியா – பிரிட்டன் இடையே டிசம்பர் 31-ம் தேதி வரை விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பிரிட்டனில், உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இந்த தொற்று அதி வேகமாகப் பரவி வருவதால், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன், பொதுமக்கள் வெளியே வரவும் தடை போடப்பட்டு உள்ளது.

இதையடுத்து, உலக நாடுகள் பிரிட்டனுக்கு விமானம் மற்றும் கப்பல் சேவைகளை மீண்டும் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளன.  அதன்படி மத்தியஅரசும் பிரிட்டனுக்கு டிசம்பர் 11ந்தேதி வரை விமான சேவையை தடை செய்துள்ளது.  இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் செல்லவோ, அங்கிருந்து விமானங்கள் வரவோ இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடை உத்தரவு நாளை (டிசம்பர் 22-ம் தேதி)  நள்ளிரவு 11.59 மணி முதல் அமலுக்கு வருகிறது. டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.