செயற்கை நுண்ணறிவு தொழில் புரட்சிக்கு இந்திய இளைஞர்கள் தயாராக வேண்டும்….கிரிஸ் கோபாலகிருஷ்ணன்

டில்லி:

செயற்கை நுண்ணறிவு தொழில் புரட்சிக்கு ஏற்ப இந்திய இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ விவசாயம், உற்பத்தி துறை தவிர்த்து செயற்கை நுண்ணறிவு என்ற 4வது தொழில் புரட்சிக்கு ஏற்ற திறன் கொண்டவர்களாக இளைஞர்களை மாற்றுவது இந்தியாவுக்கு பெரிய சவாலாக உள்ளது. நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் சமுதாயம் விவசாயம், உற்பத்தி போன்ற பல தொழில்களிலும், வெள்ளை காலர் பணிகளை கொண்ட சேவை துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

பாரம்பரிய பணிகளில் இருந்து விடுவித்து செயற்கை நுண்ணறிவு துறை பணிகளுக்கு ஏற்ற திறனுள்ள இளைஞர்களாக அவர்களை மாற்றி அமைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு துறை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘அது நமக்கு பிடித்திருந்தாலும் சரி, பிடிக்கவில்லை என்றாலும் சரி அது நட க்கப்போகிறது. அதனால் அதற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். திறன் கொண்ட பணியாளராக நாம் மாற தயாராக வேண்டும். வழக்கமான பணிகளை இழக்க நேரிடும். அந்த பணி சார்ந்த இதர வேலைவாய்ப்புகள் தான் அதிகம் உருவாகும்.

உதாரணமாக ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் ரோபோட் பயன்படுத்தினால் பெயின்ட் அடிக்கும் தொழிலாளர் வேலை இழக்க நேரிடும். வேலையிழப்பு ஒரு புறம் இருந்தாலும் அதிக தீங்கு விளைவிக்க கூடிய ரசாயன பெயின்ட்டை கையாளுவதில் இருந்து மனித இனம் காக்கப்படுகிறது’’ என்றார்.

இது குறித்து ஆஸ்டிரோபிசிஸ்ட் ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகையில், ‘‘இதற்கு நாம் எப்படி தயாராக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் வள ஆதார அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம். நவீனமயமாக்கல் வரலாற்றில் செயற்கை நுண்ணறிவு என்பது மிக மோசமானதாக இருக்கலாம்.

இதன் மூலம் சக்திவாய்ந்த தானியங்கி ஆயுதங்கள் அல்லது ஒரு சிலர் பலரை கட்டுப்படுத்தும் நிலை ஏற்படலாம். இது நமது பொருளாதாரத்திற்கு பெரிய இடையூறாக அமையும்’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: India has a major challenge of transitioning its young workforce to the fourth industrial revolution called Artificial Intelligence says Infosys co-founder Kris Gopalakrishnan, செயற்கை நுண்ணறிவு தொழில் புரட்சிக்கு இந்திய இளைஞர்கள் தயாராக வேண்டும்....கிரிஸ் கோபாலகிருஷ்ணன்
-=-