இந்தியாவின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது! :  சச்சின் சர்டிபிகேட்

தான் விளையாடிய காலத்தில் இருந்ததை விடம் தற்போது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு மிகச்சிறப்பாக உள்ளது என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்

இந்திய கிரிக்கெட் அணி நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. குறிப்பாக அடுத்த வருடம்  உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சர்வதேச தரவரிசையில் முக்கிய இடத்தில் இருக்கும் இந்திய அணி, இந்தத் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடும் என்று ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

 


இந்நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு   குறித்து முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

“நான் விளையாடிய காலத்தில் இல்லாத அளவுக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தற்போது பலமாக உள்ளது.

தலைசிறந்த வேகப்பந்து வீச்சு குழுக்களில் ஒன்றாகவே நான் இந்திய அணியை பார்க்கிறேன். தற்போதைய அணியில் கலவையான வேகப்பந்து வீச்சு குழு இருக்கிறது. ஸ்விங் செய்து அசத்தும் புவனேஷ்வர் குமார், உயரமான வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் ஷர்மா, வித்தியாசமாக பந்து வீசும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஜஸ்பிரித் பும்ரா, அதிவேகமாக பந்துவீசும் உமேஷ் யாதவ் என தற்போதைய வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது.

ஆல்ரவுண்டர் பாண்டியாவைப் போல், புவனேஷ்வரும் தேவையான நேரத்தில் ரன்குவிப்பில் ஈடுபடக் கூடியவர்” என்று சச்சின் பாராட்டியுள்ளார்.