டில்லி

ளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 62-ஆம் இடம் பெற்று சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைவிட பின்தங்கியுள்ளது.

மக்களின் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளரும்  நாடுகள் பட்டியலை உலக பொருளாதார கூட்டமைப்பு தயாரித்தது.

 

அந்த பட்டியலில் இந்தியாவுக்கு 62-வது இடமே கிடைத்துள்ளது.

 

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 22-வது இடத்திலும், சீனா 26-வது இடத்திலும், வங்காள தேசம் 34-வது இடத்திலும், இலங்கை 40-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்தில் இந்தியாவைவிட மேலிடத்தில் இருக்கின்றன.

 

இந்தப்பட்டியலில் லித்துவேனியா முதல் இடத்தில் உள்ளது. ஹங்கேரி, அசெர்பைஜான், லடிவியா, போலாந்து ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

 

கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 60-வது இடத்தில் இருந்த இந்தியா இன்னும் கீழிறங்கி உள்ளது.

 

இதே போல் வளர்ந்த நாடுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நார்வே முதல் இடத்தில் உள்ளது. அயர்லாந்து, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இதில் அமெரிக்காவுக்கு 23-வது இடமும், ஜப்பானுக்கு 24-வது இடமும் கிடைத்துள்ளது.