டில்லி

லகிலேயே அதிகம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் உலகில் உள்ள நாடுகளில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தியது.

சர்வதேச குழந்தைகள் தினமான ஜூன் 1 அன்று அந்த நிறுவனம் கணக்கெடுப்பின் அறிக்கை வெளியிடப்பட்டது

அந்த அறிக்கையில் காணப்படுவது :

172 நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்கள்அதிகம் இருப்பதாக கண்டறியப் பட்டது.  இதில் இந்தியா 116 ஆம் இடத்தில் உள்ளது

700 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, தங்கள் குழந்தைப் பருவத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரியவருகிறது

நமது அண்டை நாடுகளில் மூன்று நாடுகள் நம்மை விட முன்னேறிக் காணப்படுகிறது

இலங்கை 61ஆவது இடத்திலும், பூட்டான் 93ஆம் இடத்திலும், மயன்மர் 112ஆவது இடத்திலும் உள்ளன

நேபாளம் 134ஆம் இடத்திலும், பங்களாதேஷ் 134ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 148ஆம் இடத்திலும் வந்து இந்தியாவை விட பின் தங்கியுள்ளது

இந்த எண்ணிக்கையானது இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் 4 முதல் 14 வயதுள்ள குழந்தைகளில் 11.8% குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இது ஏப்ரல் 2016 ல் 31மில்லியன் ஆகும்.

தற்சமயம் மேலும் அதிகரித்திருக்கலாம்

தெருவோரங்களில் வசிக்கும் பல குழந்தைகள் வயிற்றுப் பிழைப்புக்காக, கட்டுமான இடங்க்ளிலும், ஓட்டல்களிலும் வேலை செய்ய நேரிடுகிறது.

ஒவ்வொரு மெக்கானிக் ஷெட்டிலும் இது போல நாம் பல குழந்தைத்தொழிலாளர்களைக் காணலாம்

இந்த குழந்தைகள் கல்வியை மட்டும் அல்ல, ஓய்வு, விளையாட்டு, பொழுது போக்கு அனைத்தையும் இழந்துவிடுகின்றனர்.

மொத்தத்தில் அவர்கள் இழப்பது அவர்களின் குழைந்தைமைதான்