ஐமைக்கா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

இப்போட்டியின் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களுள் மாயங்க் அகர்வால் 55 ரன்களை அடித்தார். முதல் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் அவர் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புஜாரா தொடர்ந்து 3வது இன்னிங்ஸிலும் குறைந்த ரன்களுக்கு அவுட்டானார். இந்த இன்னிங்ஸில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி 76 ரன்களில் அவுட்டானார். ரஹானே 24 ரன்களுக்கு வெளியேறினார்.

தற்போதைய நிலவரப்படி, விஹாரி 42 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி எப்படியும் 300 ரன்களை கடந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோக் மற்றும் கார்ன்வால் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.