தைரியம் இருந்தா இந்தியா வா! : பேஸ்புக் தமிழச்சிக்கு சவால் விடும் திவ்யா

நெட்டிசன்:

டந்த மாதம் 22ம் தேதி உடல்நல குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அங்கு  சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் முதல்வர் உடல் நலம் குறித்து  பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன.  குறிப்பாக பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்ற பெண்மணி, முதல்வர் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூகவளைதங்களளில் முதல்வர் இறந்துவிட்டதாகவே தொடர்ந்து எழுதிவருகிறார்.

தமிழச்சி - திவ்யா
தமிழச்சி – திவ்யா

அவர் மீது அ.தி.மு.க. பிரமுகர்கள் புகார் செய்ததை அடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தன் மீது தமிழக காவல்துறையினர் வழக்கு பதிந்ததைப் பற்றி கவலைப்படவில்லை என்றும், எதிர்கொள்ள தாயாராக இருப்பதாகவும், இந்திய சட்டத்தால் என்னை ஒன்று செய்ய முடியாது என்றும் தமிழச்சி  தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

 

இதற்கிடையே ஜெ. குறித்து வதந்தி பரப்பிய தமிழகத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் தமிழச்சி வெளிநாட்டில் இருப்பதால் அவரை கைது செய்யவில்லை.

இந்நிலையில் தமிழச்சியின் செயல்பாட்டால் தமிழகத்தில் அமைதி கெட்டுவிட்டது என்றும் முடிந்தால் தமிழகத்திற்கு நேரில் வா இரண்டில் ஒன்று  பார்த்து விடலாம் என்றும் தமிழகத்தை சார்ந்த திவ்யா என்ற பெண் பகிரங்கமாக வீடியோவில் பேசி முகநூலில் பதிவேற்றியுள்ளார்.

இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.

திவ்யாவின் வீடியோ:

 

கார்ட்டூன் கேலரி