ஹாமில்டன்:

ந்தியா நியூசிலாந்து இடையே இன்று நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டில், இந்திய 347 ரன்கள் குவித்துள்ளது.இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் சர்வதேச சதம் அடித்து சாதனை படைத்தார்.  நியூசிலாந்து அணிக்கு 348 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 5  டி20  போட்டிகளையும் இந்திய அணி கைப்பற்றிய சாதனை படைத்துள்ள நிலையில், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி இன்று தொடங்கி உள்ளது.

இன்றைய போட்டியின்போது,  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி மட்டையுடன் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். அதிரடியாக அவர்கள் ஆடியும் ரன்கள் குவிக்க தடுமாறினர்.  பிரித்வி ஷா 7.6வது ஓவரில்  21 பாலில் 20 ரன்கள் எடுத்த நிலையில்  லதாம் பிடி கிரான்கொம்மேவிடம் கேட்ச்  கொடுத்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து, கேப்டன் கோலி களமிறங்கினார்.

ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் மயங்க் அகர்வாலும், 8.4ஓவரிதல் 31 பாலுக்கு 32 ரன்கள் எடுத்த நிலையில், பிளன்டலிடம் கேட்ச் கொடுத்துவிட்டு களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து விராட் கோலிக்கு கைகொடுக்க ஸ்ரேயாஸ் அய்யர் களத்திற்குள் வந்தார்.  இதனால் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. விராட் கோலியும் பந்தை லாவகமாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார். இந்த நிலையில், 28.4 ஓவரில் விராட் கோலி 63 பந்துக்கு 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில், அவுட்டானார். நிதானமாக ஆடிய கோலி அரைசதம் (51 ரன்கள்) கடந்த நிலையில் ஆட்டமிழந்தது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.  அப்போது அணியின் மொத்த ஸ்கோர் 156ஆக உயர்ந்தது.

இதையடுத்து, கே.எல்.ராகுல் களமிறங்கினார். அவரும் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடியும் அசத்தலாக ஆடியது. ஸ்ரேயாஸ் அய்யர் அபாரமாக ஆடி மளமளவென ரன்களை குவித்தார். அவர் செஞ்சுரியை அடித்த நிலையில், 103 ரன் எடுத்தபோது கேட்ச் கொடுத்து வெளியேறினார். 45.3வது ஓவரின் போது ஸ்ரேயாஸ் அய்யார், ஒரு சிக்சர், 11 பவுண்டரிகளுடன், 107 பாலுக்கு 103 ரன்கள் எடுத்திருந்தார். சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அப்போது அணியின் ஸ்கோர் 292 ஆக இருந்தது.

இதைத்தொடர்ந்து, கே.எல்.ராகுலுக்கு கம்பெனி கொடுக்க கே.எம்.ஜாதவ் களமிறங்கினார். இந்த ஜோடி அபாரமாக ஆடியது. மீதமிருந்த 4.3 ஓவரை அநாயசமாக அடித்து தூள் கிளப்பி அணியின் ஸ்கோரை 347 ஆக உயர்த்தியது.

அதிரடியாக விளையாடிய ராகுல் 64 பந்துகளில்  6  சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள்  உள்பட 88 ரன்கள் குவித்தார். முடிவில், இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.

இதனால் 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட்டத்தை தொடர்ந்துள்ளது…